Categories
சினிமா

“விளையாட்டா பண்ணேன்” பிக்பாஸிடம் கதறிய சுரேஷ்…. பொங்கி எழுந்த ரசிகர்கள்…!!

பிக்பாஸ் விட்டு சுரேஷ் சக்ரவர்த்தி கிளம்ப போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது

நேற்று வெளியான பிரமோ காட்சிகளின் அடிப்படையில் சுரேஷ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையில் தன்னை சனம் செட்டி மரியாதைக் குறைவாக பேசியதால் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி கன்வெக்ஷன் ரூமிற்கு சென்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.  டாஸ்க் அடிப்படையில் அரக்கர்கள் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக விளையாட்டாக இவ்வாறு செய்தேன் என பிக்பாஸிடம் அழுதுகொண்டே குறிப்பிடுகின்றார்.

இதனை கேட்ட பிக்பாஸ் நீங்கள் தவறு செய்ததாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டீர்கள். அதனால் மனதைக் குழப்பிக்கொள்ளாமல் உங்கள் விளையாட்டை நீங்கள் விளையாடுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். இதனால் தொடர்ந்து சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் விளையாடப் போவது உறுதியானது. அதேநேரம் நேற்று நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள் பலரும் சுரேஷ்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேபி உட்பட பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியை தாத்தா என்று அழைக்கும்போது தனம் கொஞ்சம் மரியாதையாக பேசி இருக்கலாம். பெரியவரை வாடா போடா என்று பேசியது மிகப்பெரிய தவறு என்று பார்வையாளர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி தப்பு செய்ததாக தோன்றினால் பிக்பாஸிடம் புகார் அளித்து இருக்கலாம். அதற்கு பதிலாக சுரேசை வரம்பு மீறி தரக்குறைவாக பேசியது தவறு என்று சனம் செட்டியை சமூகவலைதளத்தில் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

இதனிடையே ஓவியா தான் பிக் பாஸ் வின்னர் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில், அவர் பைத்தியக்காரி என்ற பட்டம் சூட்டப்பட்ட வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதேபோன்று சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியேற்றுவதற்கு பிக் பாஸ் திட்டம் போட்டு உள்ளதா என்ற ரீதியிலும் ரசிகர்களிடம் இருந்து கேள்விகள் எழுந்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் மொத்த கவனமும் சுரேஷ் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CGmhpdaB4Js/?utm_source=ig_web_copy_link

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |