Categories
மாநில செய்திகள்

விளையாட்டு சங்கங்களுக்கு….. உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை….!!!!

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் என்னை அனுமதிக்கவில்லை என்று கூறி வட்டு எறிதல் வீராங்கனை நித்திய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவர் அளித்திருந்த மனுவில் மாவட்ட மாநில தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும் தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு தடகள விளையாட்டு சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஆர். மகாதேவன் இது போன்ற விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த எந்த சட்டமும் இல்லை என்றும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய இந்த விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தகுதியற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விளையாட்டு சங்கத்தை 2 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் அரசிடம் பதிவு செய்வதே கட்டாயமாக்க வேண்டும் என்றும், விளையாட்டு சங்கங்களில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட விவரங்களை மாநில அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |