தமிழகத்தில் விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் அறிவித்திருக்கிறார். சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியுள்ளார். திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் விளையாட்டு நகரம் அமைக்க கண்டறியப்பட்டுள்ள இடம் பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் உலக தரத்தில் விளையாட்டு கட்டமைப்பை ஏற்படுத்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த சூழலில் விளையாட்டு நகரம் பற்றிய அறிவிப்பை அமைச்சர் மெய்ய நாதன் தகவல் வெளியிட்டுள்ளார்.