தமிழகத்தில் சென்ற 2019-2020 ஆம் வருடத்தில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதையடுத்து கொரோனா காரணமாக கடந்த 2 வருடகாலமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து நடப்பு வருடம் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குரகம் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 14,17,19 வயது மாணவ-மாணவிகளுக்கு அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் பல நிலைகளில் நடைபெற இருக்கிறது.
மேலும் மாணவ-மாணவியருக்கு தடகள போட்டிகள் மற்றும் புது விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உத்தேச செயல் திட்ட அட்டவணையின்படி நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் முதற்கட்டமாக 14,17,19 வயது உட்பட்டவர்களுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகள் வரும் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. மேலும் இவர்களுக்கு வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக இதில் வெற்றியடைந்தவர்களுக்கு மாநில அளவிலான தடகளப்போட்டிகள் நவம்பர் 10ஆம் தேதி முதல் 14ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பின் மாநில அளவிலான குடியரசுதின போட்டிகள் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.