பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் நாகூரை சேர்ந்தவர் நஹீத் முபாரக். இவர் இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 22 வயதாகும் தாகூர் என்ற மகனும் 14 வயதாகும் மற்றொரு மகனும் மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களுடைய தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். எனவே இவர்கள் 5 பேர் மட்டும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நஹீத் முபாரக் வீட்டில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 14 வயது சிறுவனை தவிர மற்ற அனைவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவன் மட்டும் எந்த காயமும் இன்றி வீட்டின் மேல்தளத்தில் இருந்துள்ளான். இதனை தொடர்ந்து அந்த சிறுவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததுள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த சிறுவன் தான்தான் துப்பாக்கியால் குடும்பத்தினரை சுட்டுக் கொலை செய்ததாக கூறியுள்ளான். அதாவது சிறுவன் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் கைத்துப்பாக்கியை எடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார். செல்போன் விளையாட்டுகளால் குடும்பமே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.