சுவிட்சர்லாந்தில் வகுப்பை புறக்கணிக்க தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக பொய்யான சோதனை முடிவை காட்டிய மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்கவுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் உயர் நிலை பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் வகுப்பை தவிர்ப்பதற்காக தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பொய்யான பரிசோதனை முடிவுகளை காட்டியுள்ளனர். பள்ளி நிர்வாகம் இதனை நம்பி உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவிட்டனர்.
அதன் படி, ஆசிரியர்கள் மற்றும் மொத்த வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் என்று அனைவரையும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளும் விதமாக வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்த மூன்று மாணவர்கள் செய்த காரியத்தினால் பள்ளியில் உள்ள 25 நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று மொத்தமாக அனைவரையும் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டியதாயிற்று.
மேலும் மாணவர்களுக்கு வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 3 மாணவர்கள் ஏமாற்றியது தெரிய வந்ததால் கடும் விளைவுகளை எதிர் கொள்கின்றனர். அவர்கள் விளையாட்டாக செய்தது, சுவிட்சர்லாந்தின் தொற்றுநோய் சட்டத்தின் விதியை மீறியதாகிவிட்டது. இதனால் அந்த மாணவர்கள், தங்கள் பள்ளி மற்றும் சட்டம் மூலமாக பல விளைவுகளை எதிர்கொள்ளவுள்ளனர்.