ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் கோசர் மற்றும் நர்கீஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் 13 வயது மகன் நசீர் மின்விசிறியில் தொங்கிய துணியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதில் சிக்கி பலியானார். இதனைக் கண்டு அவரின் தாய் பதறிப் போனார். துணியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Categories