மைசூர் அருகே இளைஞர் ஒருவரை பாம்பு கடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் அருகே சாவாமிசூர் வித்யாரண்யபுரத்தை சேர்தவர் மது. இவருக்கு வயது 24. இவர் தனது நண்பர்களுடன் மின்சாரம் தொடர்பாக வேலை பார்ப்பதற்காக மகாதேஷ்வர மலைக்கு சென்று உள்ளார்கள். வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று வந்தது. மது அந்த பாம்பை பார்த்து மலைப்பாம்பு என்று நினைத்து பிடித்துள்ளார்.
அப்போது பாம்பு மதுவின் வலது கையை கடித்தது. இதனால் பதறிப்போன நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மதுவை கடித்தது விஷப் பாம்பு என்றும், அதற்குள் இளைஞருக்கு விஷம் தலைக்கு ஏறி பரிதாமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.