கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம், உன்சூர் தாலுகா பிளிகெரே அருகே அய்யரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவள் கவுசி. இவருக்கு வயது நான்கு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென்று அந்த நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி உள்ளார். இதனால் அச்சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். மருத்துவர்கள் பல மணி நேரம் போராடி நாணயத்தை மீட்க முயற்சி செய்தனர். இருப்பினும் சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.