ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் ஒவ்வொரு வருடமும் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் குதிரை பந்தயம் நேற்று நடந்தது. அப்போது நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற இளைஞர் பந்தயத்தின் போது, குதிரையிலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குதிரை பந்தயத்தின் போது வீரர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.