Categories
மாநில செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை… தமிழக முதல்வர் பாராட்டு…!!!

தென்கொரியாவில் கேரம் உலக கோப்பையில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் பெங்களூருவில் இருந்த சசிகலா நேற்று தமிழகம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நலத் திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு செய்து வருகிறார். அதன்படி தென்கொரியாவில் கேரம் உலக கோப்பையில் வெள்ளி வென்ற சகாய பாரதிக்கு 40 லட்சம் ரூபாய் வழங்கி முதல்வர் ஈபிஎஸ் பாராட்டு தெரிவித்தார். சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற குகேஷை பாராட்டி 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார். மேலும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள் என மொத்தம் 55 பேருக்கு தலா ஒரு லட்சம் வழங்கி பாராட்டினார்.

Categories

Tech |