விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை (30ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இணையவழியில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், சிறப்பு தொகை பெற தகுதியானவரை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டு ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும். நாளை முதல் அடுத்த மாதம் டிசம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.