விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர அரசு பணி வழங்க கோரி பரசுராமன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த வழங்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியலே உள்ளது. கிரிக்கெட்டிலும் இதே நிலைதான் இருக்கின்றது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த விவரத்தை முழுமையாக தெரிவிக்க வேண்டும். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தபோது, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஆர்வமுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் டிசம்பர் 21 தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.