Categories
தேசிய செய்திகள்

விளையாட்டை தவிர்த்துவிட்டு… விவசாயத்தில் இறங்கிய 6 வயது சிறுமி…. தந்தை பெருமிதம்… வைரலாகும் ஏர் உழும் புகைப்படம்.. ..!!

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தன் தந்தைக்கு உதவியாக விவசாய வேலை பார்க்கும் சிறுமியின் ஏர் உழும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் பள்ளி கல்லூரிகள் கல்வி மையங்கள் மூடப் பட்டிருப்பதால் மாணவ, மாணவிகள்  விளையாடி நேரத்தை கழித்து வருகிறார்கள். இந்த வகையில் ஆறு வயது சிறுமி ஒருவர் தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா சில்லாரஹல்லி கிராமத்தை சேர்ந்த சிறுமி கிருத்திகா வயது 6. இவர் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறாள். தற்போது பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் தனது தந்தைக்கு உதவி செய்யும் வகையில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தினந்தோறும்  தனது தந்தையுடன் வயலுக்கு செல்லும் கிருத்திகா அங்கிருக்கும் சிறு சிறு  வேலைகளை செய்து வருகிறாள். மேலும் சிறுமிக்கு ஒரு சைக்கிள் டயரை வைத்து ஏர் உழும் கருவி ஒன்றை அவளது தந்தை செய்து கொடுத்திருக்கிறார். அதைக்கொண்டு விவசாய நிலத்தில் கிருத்திகா உழுகிறாள். இது பற்றி அவளது தந்தை கூறும்போது, “பள்ளிகள் தொடங்கும் வரை எனக்கு உதவியாக விவசாய பணியில் ஈடுபடுவதாக எனது மகள் கூறியிருக்கிறாள்” என்று அவர் கூறினார். கிருத்திகா ஏர் கலப்பை வைத்து விவசாய நிலத்தில் உழும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |