ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் அங்கு சென்றபோது இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமிகள் கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்கு சட்டத்தின் அடிப்படையில் சிறுவர்கள் இருவரையும் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.