தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற இளம் வீரர்களின் கார் விபத்துக்குள்ளான நிலையில் அதில் உயிரிழந்த இளம் வீரரான தீனதயாளனின் உடல் சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்பாக தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அசாமிலிருந்து காரில் மேகாலயாவுக்கு 4 வீரர்கள் சென்றுள்ளார்கள். அவ்வாறு சென்ற வீரர்களின் காரின் மீது லாரி ஒன்று அதி பயங்கரமாக மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி காரில் சென்ற தீனதயாளன் என்ற இளம் வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் அவரது உடல் அசாமில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளது. அதன்பின்பு தீனதயாளனின் உடல் சென்னை அண்ணா நகரிலுள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.