Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாட செல்போன் கொடுக்கலனா…. இப்படியா பண்ணுவாங்க…. தங்கையின் செயல்…!!

தங்கை ஒருவர் தான் விளையாட அக்கா செல்போன் தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ராமலட்சுமி – முருகன். இவர்களுக்கு கார்த்திகா(19) மற்றும் அபிநிக்கா(15) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகா செவிலியர் படிப்பை முடித்துள்ளார். மற்றும் அபிநிக்கா பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது கொரோனா முடக்கம் என்பதால் இவர்கள் இருவரும் நேரம் போவதற்காக தங்கள் அப்பாவின் செல்போனில் மாறி மாறி கேம் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகா செல்போனில் வெகுநேரமாக விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

எனவே அபிநிக்கா தன்னிடம் செல்போனை தருமாறு கார்த்திகாவிடம் கேட்டபோது அவர் கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த அபிநிக்கா வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து அருந்தி மயங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் அவரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர். ஆனால் அபிநிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |