மகாராஷ்டிரா மாநிலத்தில் பெற்ற தாயே தனது இரண்டு வயது மகளை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பூல்படா என்ற பகுதியை சேர்ந்த நேஹா சோனி என்பவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார், இவரின் மூத்த மகள் நான்சி. இவருக்கு வயது இரண்டு. கடந்த சனிக்கிழமை இரவு நான்சி தண்ணீரில் விளையாடிதற்காக கடுமையாக அடித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த நான்சியை அவரது தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் தன் மகளை அடித்ததை மறைத்து டாக்டரிடம் தெரிவித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த மருத்துவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மும்பையிலுள்ள ஜேஜே மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் குழந்தைக்கு பலமான அடிபட்டதன் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சோனி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.