Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விளை நிலங்களுக்குள் புகுந்த விலங்கு…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. வேதனையில் விவசாயிகள்…!!

காட்டு யானை விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறையில் இருக்கும் தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று நுழைந்துவிட்டது. அந்த காட்டு யானை தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை போன்ற மரங்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் மறுநாள் காலை தோட்டத்தில் யானை நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானை அட்டகாசம் செய்ததால் 41 வாழை மரங்கள், 6 தென்னை மரங்கள் சேதமடைந்தது. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |