திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், வாழை, நெல், தென்னை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை வனவிலங்குகள் நாசப்படுத்துகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் பலவேசம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நுழைந்தது. பின்னர் காட்டி யானைகள் 10-க்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்களை வேரோடு சாய்த்து பயிர்களை நாசப்படுத்தியது.
மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற பலவேசம் காட்டு யானை அட்டகாசம் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுத்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.