தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வரும் ஸ்டாலினும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் அமையப்பெற்றுள்ளது. வருடம் தோறும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். நாளை நடக்க இருக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
இதனால் இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் அவருக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அதே விமானத்தில் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கும் டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே விமானத்தில் முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் பயணிக்க இருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.