திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ். இவருடைய ஐந்து மாத கர்ப்பிணி மனைவிக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை முடிந்து 15 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வ முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது