Categories
மாநில செய்திகள்

விழா மேடையில் கீபோர்டு வாசித்த ஐஜி…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட காவல்துறை ஐஜி சந்திரன் மணமேடையில் கீபோர்ட் வாசித்த  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி டிவி நகரை சேர்ந்த இசைக் கலைஞர் ராஜேஷ். இவர் பிரபல இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா புதுச்சேரியில் உள்ள சாய்பாபா திருமண நிலையத்தில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில காவல்துறை ஐஜி சந்திரன் ஐபிஎஸ் கலந்துகொண்டுள்ளார். விழாவில் மேடையில் இருந்த சிறுமியை வாழ்த்திய பின் பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்கு சென்று உள்ளார்.

இசை நிகழ்ச்சியை பார்த்து உற்சாகம் அடைந்து சந்திரன் இசைக்கச்சேரி மேடைக்கு சென்று எங்கேயும் காதல் திரை படத்திலிருந்து நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ பாடலுக்கு நீண்ட நேரம் கீபோர்டு வாசித்து அசத்தியுள்ளார். காவல்துறை ஐஜி ஒருவர் திடீரென மேடையில் கீபோர்ட் வாசித்த நிகழ்வை விழாவிற்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் கைதட்டி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ ஃபேஸ்புக்,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் ஆட்சியில் பிரபு கித்தார் இசைத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளும் இசை மீது அதிக காதல் கொண்டவர்கள் தான் என்பதை இந்த இரண்டு சம்பவங்கள் உணர்த்துவதாக பலரும் பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |