மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்ட கலெக்டராக தருண் பட்நாகர் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, புகாருக்கு ஆளான தாசில்தார் சந்திப் சர்மாவையும், மாவட்ட கலெக்டர் தருண் பட்நாகரையும் இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.