விழிஞ்சம் பன்னாட்டு துறைமுகம் இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகின்ற துறைமுகமாகும். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் கண்டைனர்களை கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்கான இந்தியாவின் முதலாவது மிகப் பெரும் முனையத்தை அமைக்க அதானி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 7525 கோடி மதிப்பிலான இந்த பணிகள் கடந்த 2015 ஆம் வருடத்தில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அதானி துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் அந்தப் போராட்டம் ஆறாவது நாளான இன்றும் நீடித்து வருகின்றது. இந்த போராட்டத்தில் லத்தின் திருச்சபையைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தொடர் போராட்டத்தினால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் விழிஞ்சம் துறைமுக கட்டுமான பணிகள் தொடங்கியபின் பல ஏக்கர் கடலோர பகுதி அரித்து செல்லப்பட்டிருப்பதாகவும் தங்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்துவதுடன் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது. இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் முன் வரவில்லை என கேரளா அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்தால் துறைமுக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பாதுகாப்பு வழங்க கோரியும் அந்த மாநில தலைமை செயலாளர் உள்துறை அமைச்சருக்கு அதானி குழுமம் கடிதம் எழுதி இருக்கிறது.