Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்ட திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர்”…. சாலை விபத்து மற்றும் கஞ்சா குறித்து விழிப்புணர்வு….!!!!!!

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சாலை விதிமுறைகள், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவசர அழைப்பு எண் பற்றி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊராட்சியில் போதை பொருட்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.

Categories

Tech |