நெல்லை மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் போலீசாரின் சாதனை குறித்து அறியும் விதமாக எல்.இ.டி டிவி அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் காவல்துறை கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ளது. இவ் அலுவலகத்தில் எல்.இ.டி டிவி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டிவி காவல்துறையினர்களின் சாதனை மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள், காவல் துறையைச் சேர்ந்த தகவல்களை காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட எல்.இ.டி டிவியை கமிஷனர் அன்பு அவர்கள் திறந்து வைத்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் துணை காவல்துறை கமிஷனரான சீனிவாசன் என்பவரும், உதவி காவல் துறை கமிஷனரான ஆறுமுகம் என்பவரும், மற்றும் பல அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.