Categories
உலக செய்திகள்

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டு உள்ளது. ஐ.நா.வின் இந்த அமைதிப் படையில் பாகிஸ்தான் ராணுவமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பல பேர் அங்கு முகாமிட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் காங்கோவின் கிழக்கு பகுதியிலுள்ள வடக்குகிவு மாகாணத்திலிருந்து பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரானது வழக்கம்போல் ரோந்துபணிக்காக புறப்பட்டது. அப்போது ஹெலிகாப்டரில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உட்பட ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் இருந்தனர். அதன்பின் சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரிலிருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து உடனே தெரியவராத நிலையில், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பகுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் மிக்க பகுதி என்பதால் ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |