Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் அருகே கொடூர விபத்து… 4 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

விழுப்புரம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்துமதி தம்பதியினர், கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் காரில் செந்தில் நாதனின் மகன் முகிலன் (24) மற்றும் சகோதரர் குருநாதன் ஆகிய அனைவரும் வந்தனர்.

அந்த கார் திண்டிவனம் அருகே பாதிரி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலையோர மரத்தில் அதி வேகமாக மோதியது. அந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |