Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேரக்கட்டுப்பாடு – கடைகளை அடைக்கப்பட்டன

கொரோனா தொற்று அதிகரிப்பால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 வரை சென்றுள்ள நிலையில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று தெரிவித்தனர். இந்தநிலையில் வணிகர் சங்கங்கள் அமைப்பு சார்பில் நேற்றும், இன்றும் ஆலோசனை கூட்டம் நடத்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு கடைகளை மூடி விட வேண்டும் என்றும், இப்படி கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் தற்போது மாலை 4 மணிக்கு மூடப்பட்டுள்ளது.

Categories

Tech |