விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா நடைபெற இருப்பதால் குளம் சீரமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திரு.வி.க வீதியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று லட்ச தீப திருவிழா தொடங்குகின்றது. பதினெட்டாம் தேதி வரை தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் இரவில் சாமி வீதி உலா நடைபெறும். அடுத்து 19ஆம் தேதி கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
இதனால் குளத்தைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி சுத்தப்படுத்தி வருகின்றார்கள். மேலும் குளத்தில் மாசடைந்த நீரை வெளியேற்றி மின்மோட்டார் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டிருக்கின்றது. இதனால் அங்கே எச்சரிக்கை பலகை வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இத்திருவிழாவானது இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது நடைபெறுகின்றது.