Categories
மாநில செய்திகள்

விழுப்புரம் TO மயிலாடுதுறை…. திடீரென பழுதான ரயில் என்ஜின்…. சிரமப்பட்ட பயணிகள்…..!!!!!

விழுப்புரத்திலிருந்து நேற்று காலை பயணிகள் ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 7 மணியளவில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு அங்கு இருந்து புறப்பட முயன்றபோது திடீரென்று என்ஜீனில் பழுது ஏற்பட்டு அங்கேயே நின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு போகும் மாணவ-மாணவிகள், அன்றாட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் செய்வதறியாமல் திணறினர்.

இதையடுத்து மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து மாற்று என்ஜீன் கொண்டுவர ஏற்பாடு செய்தனர். ஆனால் கரிகுப்பம் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிவரும் ரயில் என்ஜின் அங்கு வரவழைக்கப்பட்டது. அதன்பின் பழுதாகி நின்ற என்ஜீனை அகற்றிவிட்டு மாற்று என்ஜீன் பொருத்தப்பட்ட பிறகு சுமார் 50 நிமிடம் தாமதத்தை தொடர்ந்து பயணிகள் ரயில் அங்கிருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றது.

Categories

Tech |