சமந்தா விவாகரத்துக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில், தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் விவாகரத்துக்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் தற்போது 4 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.