ஏரி மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள நீர் முழுவதையும் பயன்படுத்திய பின்னர் அதன் கீழ்ப்பகுதியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணில் நிலத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இருக்கும்.
எனவே விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண் வளத்தை மேம்படுத்துவதற்கு ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விளைநிலங்கள் வளம் பெறும் என்பதுடன் ஏரிகள், குளங்களில் நீர் சேமிப்பு திறனும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.