Categories
தேசிய செய்திகள்

விவசாயத்திற்கு எதிரான சட்டம்…. விரைவில் நீக்கப்படும்…ராகுல் காந்தி டுவிட் பதிவு…..!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ்க்கு இடையே கடும் போட்டி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த சுழலில் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் லலித்பூரில் உரம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 4 விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினர்களை பிரியங்கா காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடங்களில் இருந்து தடுப்பு சுவர்கள் மற்றும் கம்பிகளை டெல்லி போலீசார் அகற்றினர். இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “விவசாயத்திற்கு எதிரான மூன்று சட்டங்களும் விரைவில் நீக்கப்படும் என்றும் விவசாயிகளை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தடுப்புச் சுவர்கள் தற்போது தான் அகற்றப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |