பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் இயற்கை விவசாய முறையில் ஸ்ட்ராபெரி பயிர் செய்து சாதித்து உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள குஹாதாவில் வசிக்கும் ஹர்தேவ் சிங் எனும் விவசாயி இயற்கை விவசாயத்தில் ஸ்ட்ராபெரி பயிர் செய்து உள்ளார். இவர் பயிரிட்ட ஸ்ட்ராபெரி விளைச்சல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பஞ்சாப் மாநிலம் முழுவதும் சாகுபடி செய்யும் ஸ்ட்ராபெரி நல்ல வரவேற்பை பெற்று சாதித்து காட்டியுள்ளார்.
இதுமட்டுமின்றி கேரட், முட்டைகோஸ், தர்பூசணி, பிரக்கோலி ,முலாம்பழம் உள்ளிட்ட 24 வகை காய்கறி மற்றும் பழங்களை பயிரிட்டு நல்லமுறையில் விளைச்சல் செய்து வருகிறார்.