Categories
தேசிய செய்திகள்

விவசாயத்தை நவீனமயமாக வேண்டும் – மோடி உரை…!!

விவசாயத்தை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வகையில் இந்த வருடத்தின் முதல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, “குடியரசு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட கலவரம் நாட்டையே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் மூவர்ணக் கொடி அவமதிப்பு செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது. வன்முறை எப்போதும் பிரச்சினைக்கு தீர்வாகாது. 2021 ஆம் வருடத்தை சிறப்பான வருடமாக உருவாக்க மக்கள் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும்,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பிற நாடுகளை விட இந்தியாவில் விரைவாக செலுத்தப்படுகிறது. அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வேளாண் துறையை நவீனப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் வேளாண்மையை நவீன மயமாக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |