இலங்கையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் விதமாக ரசாயன உர இறக்குமதிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்து இருந்தார். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கை மக்களின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இது தொடர்பாக வேளாண் துறை மந்திரி மகிந்த அமர வீர நாடாளுமன்றத்தில் பேசும்போது சில கட்சிகளின் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஆலோசனைப்படி இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க நாம் விரும்பியதன் விளைவு பிற நாடுகளில் இருந்து தரமற்ற தீங்கு விளைவிக்க கூடிய அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் 6 லட்சம் டன் அளவிற்கு இத்தகைய அரிசி நாம் இறக்குமதி செய்து இருக்கின்றோம் என கவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நெல் விளைச்சலுக்கு மோனோகுரோட்டோபாஸ் மற்றும் கிளைபோசேட் போன்ற வேதி உரங்களை பயன்படுத்தும் நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்திருப்பதாக வருந்திய அமர வீரா இத்தகைய பொருட்களை இலங்கையில் பயன்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.
Categories