Categories
அரசியல்

விவசாயம்: விருதை தட்டி தூக்கிய பெண்மணி…. இதோ ஒரு சுவாரசியமான தொகுப்பு…..!!!!!

விவசாயத் தொழிலில் பெண்களுக்கு பங்குள்ளது. ஆனால் ஆண்களின் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம். ஏனெனில் விவசாயத்தில் ஒரு சில பணிகளை தவிர்த்து மற்றவை எல்லாம் கடும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் ஆகும். இதெல்லாம் பெண்களின் உடலுக்கும், இயற்கைக்கும் ஒத்து வராத வேலைகள் ஆகும். எனினும் உயர் கல்வி பயின்றுவிட்டு வேலை இல்லை என புலம்பிக்கொண்டிருப்பதைவிட நம்அனைவரின் உயிர் காக்கும் வேளாண் தொழிலில் ஈடுபடலாம் என்று கூறுகிறார் பிரசன்னா. தற்போது நலிந்து வரும் விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. விவசாயம் பொய்த்துப்போவதும், விவசாயிகளின் தொடர் தற்கொலைகளும் நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம் எனும் இலக்குடன் நாம் செயல்பட்டால் விவசாயத்தில் வெற்றி பெறுவது நிச்சயம். பல தொழில்களில் செய்யும் முதலீட்டில் 10 % விவசாயத்துக்கு இருந்தால் போதுமானது.

சொந்தமாக நிலம் இல்லையென்றாலும் விவசாய நிலங்களை வாடகைக்கும், ஒத்திக்கும் மிக எளிதாகப் பிடித்து விவசாயம் செய்யலாம். இளைஞர்கள், இளம்பெண்களின் பார்வை மாறினால் விவசாயம் மூலம் நாடும் செழிக்கும், நாமும் நலம் பெறலாம் என்று பிரசன்னா கூறுகிறார். நெல்லில் தமிழ்நாட்டு அளவில் முதலாவது இடம்பிடித்து, சிறந்த விளைச்சலுக்கான விருது பெற்றிருப்பது இவருடைய விவசாய திறமைக்கு ஒரு சோற்றுப்பதம் ஆகும். மதுரை மாவட்டம் திருப்பாலை கிராமத்தில் வசித்து வரும் பிரசன்னாவுக்கு 32 வயது ஆகும். முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டியவர் ஏன் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார்..? என்பதற்கான விடையை பிரசன்னாவே கூறுகிறார். அதாவது, விவசாயம்தான் எங்களது குடும்பத்தொழில். இதனால் ஓடி விளையாடுகிற வயதிலேயே என் பெற்றோருடன் வயலில் இறங்கி, கூட நின்று உதவுவேன். வயல்களைச் செழிப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் எனும் எண்ணம் அப்போதே எனக்கு வந்து விட்டது.

மேலும் விவசாயத்தை இதுபோன்றுதான் திட்டமிட்டுச் செய்யவேண்டும் என்ற ஆசையும் வந்தது. எனது கணவர் பத்மநாபன் என்னை மனைவியாக ஏற்க முக்கியமான காரணமே, நான் வயல் வேலையில் ஆர்வத்துடன் இருந்தது தான் என்று சொல்லும்போதே பெருமிதமாக உள்ளது. இதற்கிடையில் பலலட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறும் டெல்டா பகுதியில் திட்டமிட்டு விவசாயம் செய்யும் பெரும் நிலச்சுவான்தார்கள் கூட நெல் விளைச்சலில் பிரசன்னாவின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. நமது பாரம்பரியம் விவசாயம் முறைகளை விட்டு விடாமல், காலத்திற்கு ஏற்றவாறு புது கண்ணோட்டத்துடன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிற நேர்த்தியும்தான் பிரசன்னாவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது. விவசாயம்தான் என் தொழில் என்று முடிவு செய்த பின் அதில் என்ன தனித்துவத்தைக் காட்ட வேண்டாமா..?. வருடந்தோறும் மாநிலஅளவில் நெல் விளைச்சலில் சாதனை படைத்தோருக்கு விருது தருவதோடு 5 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையையும் தருவதைக் கேள்விப்பட்டேன்.

இதனால் எப்படியாவது இவ்விருதை வாங்கியே ஆக வேண்டும் என்று உழைத்தேன். எனது கணவர் அதுக்கு பக்கபலமாக இருந்து ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து 3 முறையும் தோல்விதான் எனக்குப் பரிசாக கிடைத்தது. அதற்காக விவசாயத்தை விட்டுட முடியுமா என்ன..? அந்தத் தோல்விகளையே அனுபவமாக ஏற்றுக்கொண்டு எங்கெல்லாம் சறுக்கல் நடந்தது என பார்த்து, அதையெல்லாம் சரிபடுத்தினேன். அதன்பின் தன் 4-வது முயற்சியில் வாகை சூடினேன்.  சின்னப்பட்டி கிராமத்தில் இருக்கும் தன் வயலில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்தேன். மேலும் வயலில் ஆட்டுக்கிடை அமைத்து, முன்பே விதைத்து இருந்த தக்கைப் பூண்டு செடிகளை மடக்கி உரமாக்கினார். மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து, தான் வளர்த்த கால்நடைகளில் இருந்து கிடைத்த உரத்துடன் மண் புழு உரத்தையும் சேர்த்து இட்டார். விதையைத் தேர்ந்தெடுப்பதில் துவங்கி நாற்றுகளுக்கான இடைவெளிவரை அனைத்தையும் திட்டமிட்டுச் செய்தார்.

சீரானஇடைவெளியில் களை எடுத்தார். இதனிடையில் களைகளின் வேர்கள் அறுபட்டு வயலிலேயே விழுந்ததில் அவையும் உரமாகியது. இடை இடையே உரங்களும் இட, இப்பணிகள் அனைத்தையும் வேளாண் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். அதன்பின் எதிர்பார்த்ததுபோல் பயிர் செழிப்பாக வளர்ந்தது. அந்த வகையில் ஒரு குத்து நாற்றில் 49 சிம்புகள் உருவாகியது. இவை தரமான அதிக எண்ணிக்கையான மணிகள் கொண்ட மகசூல் அளிக்கும் கதிர்களாக உருவாகியது. இதே நிலையில் “இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் தென்பட நீர் மறைய நீர் கட்டு” என்று சொல்வார்கள். அதனை நான் சரியாகப் கடைபிடித்ததால் குறைந்தளவு தண்ணீரில் நல்ல விளைச்சலைத் தர முடிந்தது. வேளாண் அதிகாரிகள் பல பேர் நடுவர்களாக இருந்த சூழ்நிலையில், கதிர் அறுவடை நடைபெற்றது. பின் ஒரு ஹெக்டேரில் 16,115 கிலோ மகசூல் கிடைத்து விட்டது. ஆகவே எதையும் சரியாக திட்டமிட்டுச் செய்தால் சாதிப்பது எளிது என பிரசன்னா அனுபவபூர்வமாக கூறுகிறார்.

Categories

Tech |