Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் குரல்…. மத்திய அரசு செவி சாய்க்காது…. பிரியங்கா காந்தி குற்றசாட்டு….!!

விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

மத்திய அரசு 3 வேளாண் சட்டத்தை கொண்டு வந்து பல எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றியது. இதனால் விவசாயிகள் பலர் போராட்டத்தில் இறங்கினர். வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு தலைநகரான டெல்லியில் 25 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று கூறி இரவு பகல் பாராது போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |