விவசாயிகளின் கோரிக்கையை செவி கொடுத்து கேளுங்கள் என்றும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள் என்றும் பிரதமர் திரு.மோடியை ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் காணொளி காட்சி முலம் பங்கேற்று பேசிய பிரதமர் திரு.மோடி புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் கூறினார். விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும் அதை நிக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.
வேளாண்சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக குற்றம்சாட்டினார். இந் நிலையில் திரு.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் பிரதமர் திரு.மோடி விவசாயிகளுக்காக இறங்கி வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி விவசாயிகளின் கோரிக்கையை செவிகொடுத்து கேட்க வேண்டும் என்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று திரு.ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.