Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கை…. “உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும்”…. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப உருளைக்கிழங்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும் என நீலகிரி ஆட்சியர் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க 102 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது, தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து துண்டு பிரசுரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

விவசாயிகளின் விதைக்கிழங்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப அரசு தோட்டக்கலை பண்ணைகளான நஞ்சநாடு மற்றும் கோல்கிரைனில் உருளைக்கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் கடன் அட்டை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முகாம்கள் நடத்தப்படும் எனவும் தோட்டக்கலை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத் துறை மூலமாக வழங்கப்படும் உழவர் கடன் அட்டை தொடர்பான கோரிக்கைகளும் தனியாக கூட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |