மக்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் சுரேஷ், பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை தலைவர் முனியசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துள்ளது. தற்போது எங்கள் மனுவை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி கூறுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.