விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசின் அணுகுமுறை உணர்வற்றதாக இருப்பதாக சோனியாகாந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
பால்கோட் தாக்குதல் தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் சேட்கள் கசிந்தும், அரசின் மௌனம் கலையவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தேசபக்தி மற்றும் தேசியம் பற்றி சான்றிதழ்கள் வழங்குபவர்கள் இப்போது முற்றிலும் அம்பலப்பட்டு நிற்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.