Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் – அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார்.

இந்நிலையில் அவருடைய உரையில், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை  டன்னுக்கு ரூ.250 வீதம் செலுத்தப்படும். பழப்பயிர் சாகுபடிக்கு ரூபாய் 29.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காய்கறி, கீரை சாகுபடிக்கு ரூ.95 கோடி ஒதுக்கீடு. ரூ.2 லட்சம் குடும்பங்களுக்கு 16 லட்சம் மூலிகைச்செடிகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.2.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |