Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்தால் விரைவில் அனைவரும் அதில் இணைய வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறான திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பிரதமரின் கிசன் சம்மன் நிதி திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கி வருகிறது. அந்தப் பணம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பிரதமரின் இந்த திட்டத்தின் தற்போது 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்படுகிறது.

இதற்கு முன்னதாக 6 தவணை பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் எழுதப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏழாவது தவணை பணம் செலுத்தப்படுகிறது. மேலும் ஏழாவது தவணையை மத்திய அரசை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தற்போது வரை ஒன்பது கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற தகுதியுள்ள விவசாயிகள் இன்னும் ஐந்து கோடிபேர் இணையாமல் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் விரைவில் இணைந்து பயன்பெற வேண்டுமென மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் 01124300606 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதுமட்டுமன்றி இந்த புதிய திட்டத்தில் சேர விரும்புபவர்கள் pmkisan.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

Categories

Tech |