Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கான சிறந்த திட்டம்…. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்ஷன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் தகுதி உடையவர்கள் ஆவர். இந்த திட்டத்திற்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் கிஷான் பென்ஷன் திட்டத்தில் இணையலாம்.

இதில் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி வர வேண்டும். 60 வயதை தொட்ட பிறகு மாதம்தோறும் சிறு குறு விவசாயிகளுக்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இருந்தாலும் தேசிய பென்ஷன் திட்டம், தொழிலாளர் ஈட்டுறுதி கழகம்,தொழிலாளர் நிதி அமைப்பு திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு கிஷான் பென்ஷன் திட்டத்தில் பயன்பெற முடியாது.

Categories

Tech |