தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர்.
இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதன்படி இந்த வருடம் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை நிறுவனங்கள் மூலம் ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூட்டுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.