Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கான pm-kisan பணம்…. ரூல்ஸ் திடீர் மாற்றம்…. இனி இது கட்டாயம்….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது ஆண்டுக்கு மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையும் 2000 ரூபாய் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஆவணங்கள் குறித்த விதிமுறைகளில் அரசு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி pm-kisan திட்டத்தின் கீழ் பயன்பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணம் என அரசு விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. இதில் தகுதியான விவசாயக் குடும்பங்கள் தங்கள் ரேஷன் கார்டு எண் சமர்ப்பித்து ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்களின் நகல்களை pm-kisan இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பத்தாம் தவணைத் தொகையை கடந்த ஜனவரி 1ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |