அமெரிக்காவில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் கனடாவை சேர்ந்த யூடியூபர் லில்லி சிங் விவசாயிகளின் போராட்டத்திற்கு மாஸ்க் அணிந்து ஆதரவு அளித்துள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்திலிருந்து மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் போராட்டத்திற்கு ஆதரவும்,எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை போராடியவர்களில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் போராட்டக்களத்தில் பலியாகியுள்ளனர்.
I know red carpet/award show pictures always get the most coverage, so here you go media. Feel free to run with it ✊🏽 #IStandWithFarmers #GRAMMYs pic.twitter.com/hTM0zpXoIT
— Lilly (@Lilly) March 15, 2021
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கிராமிய விருது வழங்கும் விழாவில் கனடாவை சேர்ந்த யூடியூபர் முகக்கவசம் அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அந்த முக்கவசத்தில் ‘ நான் விவசாயிகளுடன் நிற்கிறேன்’ என்ற வாசகம் எழுதி இருந்தது. மேலும் அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே இதைப்போன்றே அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.